தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சித்த மருத்துவர்கள் நன்றி
தமிழக சட்டப்பேரவையில் 2023 -24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தாக்கல் செய்தார். இதில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.40 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மரு. பாஸ்கர்
இராஜாமணிக்கம் அவர்கள் கூறியதாவது
திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.சித்த மருத்துவ பல்கலைக்கழக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் மற்றும் மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்கு காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து சித்த மருத்துவர்கள் சார்பாக உளமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும், உறுதுணையாக இருந்த நிதி அமைச்சர் பிடி. ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
ReplyReply to allForward
|