தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள், துப்பாக்கிச் சூடு இல்லை : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : தமிழகத்தில் சாதி, மதச்சண்டைகள், துப்பாக்கிச்சூடு இல்லை என்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதல்வர் பேசினார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நேற்றுமுதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

*தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை;இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.

*பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன; உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன்.பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்.
.
*தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் 88 வழக்குகள் பதிவு; 100க்கும் மேற்பட்டோர் கைது; பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு; பீகார் யூடியூபர் மணிஷ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

*கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்கள் இருந்ததால், என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

*ஜெயலலிதா அம்மையாரின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார்.அப்படி நடக்கும் போது திமுக எப்படி சும்மா இருக்க முடியும்?; உறுதியாக சொல்கிறேன் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவரும்.

*பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியபிறகே அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்தது; குற்றப்பிரிவு விசாரணை முறைப்படி நடக்காததால் மீண்டும் போராடி அவ்வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றோம்.இவ்வழக்கில் கைதானவர்களில் அதிமுக இளைஞரணி நிர்வாகியும் ஒருவர்; திமுக ஆட்சிக்கு வந்ததும் சிபிஐக்கு உதவ பெண் எஸ்.பி.யை அரசு நியமித்தது.

*10 ஆண்டு காலமாக வேரூன்றி இருந்த போதைப்பொருள் சாம்ராஜ்யம், அரசு எடுத்த நடவடிக்கைகளால் சரிந்துள்ளது.அதிமுக விட்டுச் சென்ற படு பாதகங்களில் ஒன்று, போதை பொருட்கள்; அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’-யில் போதை பொருட்களை கண்டுபிடித்தோம்.

“மக்களிடம் ஆசையைத் தூண்டி, ஆருத்ரா போன்ற | நிதி நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன; இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது மொதுமக்கள் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்! இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உ த்தரவிட்டுள்ளேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *