தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு
அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே காலை 10.00 மணி அளவில்
நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 21 வெள்ளிக்கிழமை காலை 10.00
மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு
முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு
100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர்
டிப்ளமோரூபவ் ஐடிஐ பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும்
நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு
செய்து கொள்ளலாம்.ரூ

 

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள்;; தங்களின் சுய விவர அறிக்கை கல்விச்சான்றுகள்
ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின்; நகல்களுடன்; கலந்து கொண்டு பணி;வாய்ப்பினை
பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-
237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *