டோனி மீது மிகவும் எரிச்சலாக இருக்கும்” சூப்பர் கிங்ஸ் அணி .

சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது டோனி மீது மிகவும் எரிச்சலாக இருந்ததாக அணியின் முன்னாள் நட்சத்திரத்தின் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை ஜியோ சினிமாவுக்கு உத்தப்பா அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். டோனி மீது எரிச்சலாகவே இருக்கும். ஹேசில்வுட் வீசும் போது பைன்லெக் திசையில் யாரையும் நிறுத்த மாட்டார். ஆனால் எனக்குத் தெரியும் ஹேசில்வுட் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்று அப்படி வீசும் போது பாயிண்டில் பவுண்டரி விளாசலாம் என்று அடித்தால் டீப் பாயிண்டில் பீல்டரை நிறுத்தி கேட்ச் கொடுக்குமாறு செய்து விடுவார் டோனி.அதாவது, நாம் எந்த பீல்ட் நிலையில் அடித்துப் பழக்கமில்லாதவர்களோ அதே இடத்தில் டோனி நம்மை அடிக்க வைத்து வீழ்த்தி விடுவார். பேட்டிங் செய்பவர் எண்ணங்களுடன் விளையாடுபவர் தோனி. பேட்டரை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். அதே போல் பவுலர்க்ளையும் வித்தியாசமாகச் சிந்திக்க வைப்பார்.அதாவது விக்கெட் எடுக்கும் எண்ணத்தை தவிர வேறு எதையும் ஒரு பவுலர் சிந்திக்காத வகையில் உங்களை யோசிக்க வைப்பார் டோனி. ஒரு முறை தேவ்தத் படிக்கல்லை அப்படித்தான் வீழ்த்த உத்தி வகுத்தார். தேவ்தத் படிக்கல் பிக்-அப் ஷாட் நன்றாக ஆடுபவர். டோனி என்ன சொன்னார் தெரியுமா, ஓஹோ பிக் அப் ஷாட்டா? அதை அவர் ஆடுமாறு செய்து விடுவோம் என்றார். பிறகு பைன் லெக் பீல்டரை லெக் கல்லிக்குக் கொண்டு வந்தார். எங்கிருந்து அவருக்கு இப்படியெல்லாம் யோசனை வருகின்றது என்று நான் அசந்து போயிருக்கின்றேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *