கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வடிவேலு பாணியில் பதில் .

2000 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் பேஷன் டிசைனிங்கில் பட்டப்படிப்பு முடித்து உள்ளார். கீர்த்தி நாயகியாக நடித்த முதல் படம், 2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த கீதாஞ்சலி மலையாள திரைப்படம். தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன்,ரெமோ, விஜயுடன் பைரவா, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட மகாநதி.இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார்.

இப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் வெளியான தசரா படம் சூப்பர் ஹிட்டானது.

மேலும் ரிவால்வர் ரீட்டா, ரகு தத்தா, மாமன்னன் போன்ற பல படங்களை கையில் வைத்துள்ளார். முன்னணி நாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், கீர்த்தியின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கீர்த்தியின் ரசிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷிடம் திருமணம் குறித்து நேரடியான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு பாணியில் இருவரின் பாக்கெட்டிலும் எதுவும் இல்லை என்றும், இப்போது திருமண பேச்சுக்கே இடமில்லை என்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷிடம் ரசிகரின் திருமணம் குறித்த கேள்வி. அது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். கீர்த்தியின் அம்மா மேனகா தமிழில் ரஜினிகாந்த் உட்பட சில டாப் ஸ்டார்களின் ஹீரோயினாக பிரபலமானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *