டிகே சிவக்குமார் பங்கேற்ற நிலையில் திடீரென்று பணமழை பொழிந்தது.

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சார்பில் பிரஜா த்வானி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் யாத்திரையில் டிகே சிவக்குமார் பங்கேற்ற நிலையில் திடீரென்று பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.கர்நாடகா சட்டசபைக்கு 2018 ல் தேர்தல் நடந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. 5 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இதுதவிர தெலங்கானா முதல்வர் பிஆர்எஸ், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், மேலும் சில சிறிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருப்பினும் கர்நாடகா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. ஆம்ஆத்மியும் 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. தேர்தல் தேதி வெளியான பிறகு பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஆளும் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் பிரஜா த்வானி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் பிரஜா த்வானி யாத்திரை மேற்கொண்டார்.டிகே சிவக்குமார் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது டிகே சிவக்குமார் திறந்த பஸ்சில் நின்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த டிகே சிவக்குமார் பாஜக, ஜேடிஎஸ் கட்சியை விமர்சனம் செய்தார். மேலும் டிகேசிவக்குமார் பயணித்த திறந்த பஸ்சின் முன்பும், பின்பும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகமேளதாளங்கள் முழங்க, வழிநெடுகிலும் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த வேளையில் டிகே சிவக்குமார் திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பஸ்சின் மேல் நின்றபடியே தூக்கி வீசினார். இதனால் யாத்திரையில் பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி சர்ச்சையாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *