டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்

தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது என்றும் சட்டசபையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பலரும் தயாராகின்றனர். தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு சட்டசபையில் இன்று எதிரொலித்தது. கூட்டமைப்பில் India சேர்ந்தாலும் சிக்கல்.. சேராவிட்டாலும் சிக்கல் மாணவர்கள் + பெண்கள்.. முத்து முத்தாக 3 முக்கிய அறிவிப்புகள்.. குட் நியூஸ் சொன்ன ஸ்டாலின்.. அடிதூள் ஒரே மையத்தில் 2000 பேர் தேர்ச்சி குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பயிற்சி நிறுவனம் விளக்கம் இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2,000 பேர் தேர்வானது உண்மைதான் என்று அந்த பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் வெற்றி பெற்றிருப்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இதனிடையே டிஎன்பிஎஸ் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். குரூப்-4 தேர்வு குறித்து அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். டி.என்.பி.எஸ். குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதனிடையே தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர்தான் தனது மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சீர்திருத்தம் இது குறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *