சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஜெயலலிதா ஏ1, சசிகலா ஏ2 என கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை, ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
