ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி
தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி, ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து சூர்யா ஜோடியாக ‘வணங்கான்’படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகியதால், கீர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டார்.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஜெயம் ரவியின் 32- வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். இந்தப் படம் ரூ.100 கோடியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க இருக்கிறார்.
ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி
