ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலை
நிறுவன தலைவர் டாக்டர் ஜிஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை
ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததன் மூலம், இந்தியா எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாசிச பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைவதற்கான தெளிவான தருணமிது.
சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் வழக்கைப் பயன்படுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் முயற்சியின் மூலம், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுள்ளார். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் இல்லாத, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்துத்துவா ராஷ்டிராவை உருவாக்க பாஜக விரும்புகிறது.பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே நேர் கோட்டில் பயணித்து ஒன்று சேர வேண்டிய தருணம் இது, இல்லையெனில் நாடு எதிர்கட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்பும் பாஜகவின் பாசிச செயல்திட்டத்தில் இந்தியா தனது பன்முகத்தன்மையை இழந்து ஒரே ஆட்சி ஒரே கட்சி ஒரே அரசு என்று சர்வதிகார வழியை வருங்காலங்களில் இந்தியா பின்பற்ற நேரிடும் .
ஆகவே அதை தகர்த்தெறிய வேண்டும் என்று சொன்னால் சாதி மதம் கடந்து அனைவரும் ஒருமித்த கருத்தோடு பாசிச கொள்கைகளுக்கு எதிராக அணி திரண்டு வீதிக்கு வந்தால் மட்டுமே நம்மை நாம் பாதுகாக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.