சென்னை விரிவாக்கத் திட்டம் பி.கே.சேகர்பாபு  தகவல்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் சென்னை விரிவாக்கத் திட்டம்
மூன்றாவது முழுமைத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் .
தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலின்படி
செயல்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), சென்னை பெருநகர
பகுதிக்கு மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (Third Master Plan) (2026-2046)
தொலைநோக்கு ஆவணம்(Vision Document) தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் முழுமைத் திட்டத்திற்கான இத்தொலைநோக்கு ஆவணம், சென்னை
பெருநகர பகுதிக்கான நீடித்த சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும்
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு திட்டமிட
பயன்படும்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணக்கிட்டு தயாரிக்கப்படும் சென்னை
பெருநகரின் மூன்றாவது முழுமைத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும்
பணி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. சென்னை பெருநகரின்
முதல் முழுமைத் திட்டம் 1976 ஆம் ஆண்டும், இரண்டாம் முழுமைத் திட்டம் 2008 ஆம்
ஆண்டும் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னை பெருநகரப் பகுதிக்கு மூன்றாம்
முழுமைத் திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் 2026 ஆம்
ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.
இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில்,
மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா
கடற்கரை, பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக
வளாகங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும்,
வலைத்தள வாயிலாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியினை சென்னை
பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) முன்னெடுத்துள்ளது. அதன்படி, தொலைநோக்கு

ஆவண தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கேட்பு படிவம்,
மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்த உதவுகின்றது. இதன்
மூலம் நவீன, முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய நகரமாக எதிர்கால
சென்னையை மாற்றலாம்.
இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு உங்களின் கருத்துகள்
வரவேற்கப்படுகிறது, கருத்து தெரிவிக்க விரும்புவோர்,
ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய: https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 அல்லது
தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய : https://forms.gle/4cQVYKFekpia4upr9 அல்லது
www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம் என
இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னை
பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் திரு.பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *