சென்னை: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், சிறப்பு பள்ளிகளில் 6, 7ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாணவியருக்கு 3ம் பருவத் தேர்வுகள், 8, 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 18ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி, 6, 7ம் வகுப்புகளுக்கு 18ம் தேதி தமிழ், 19ம் தேதி ஆங்கிலம், 21ம் தேதி கணக்கு, 24ம் தேதி அறிவியல், 26ம் தேதி சமூக அறிவியல், 27ம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வுகளை நடத்தி, 28ம் தேதி விளையாட்டுத் தேர்வு நடத்த வேண்டும்.
8, 9ம் வகுப்புகளுக்கு 18ம் தேதி தமிழ், 19ம் தேதி ஆங்கிலம், 21 கணக்கு, 25ம் தேதி அறிவியல், 26ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 27ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் 28ம் தேதி உடற்கல்வி தேர்வு நடத்த வேண்டும். மேற்கண்ட தேர்வுகளில் 6, 8ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலையிலும், 7, 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மதியமும் தொடங்கும். காலைத் தேர்வுகள் 9.45 மணிக்கு ெ தாடங்கி 12.30க்கு முடியும். மதியம் தொடங்கும் தேர்வுகள் 1.15க்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.