சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 47 ஆவது இந்திய சுற்றுலா
மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் சிறந்த அரங்கம்
அமைத்த அரசு துறையினருக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில்
பரிசுகளை வழங்கினார்.
அரங்கம் அமைப்பில் ஓட்டு மொத்தமாக சிறந்து விளங்கியதற்காக
காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் சிறப்பான அரங்கம்
அமைப்பிற்கு முதல் பரிசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறைக்கும்,
இரண்டாம் பரிசு உயர்கல்வித்துறைக்கும், மூன்றாவது பரிசு
சிறைத்துறைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரயில்வே,
மெட்ரோ இரயில் நிறுவனம் உள்ளிட்ட சிறப்பாக அரங்கம் அமைத்த ஒன்றிய
அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு
நிலைகளில் அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்
அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,
தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழாவை
முத்தமிழ் வித்தகர், பாரெல்லாம் பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமான
விழாவாக நடத்தினார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ
சோழனுக்கும் கோயில் வளாகத்தினுள் சிலை வைக்க திட்டமிட்டார் கலைஞர்
திருமகனார்.
இந்தியத் தொல்லியல் துறை சட்டம் இடம் தரவில்லை. எனவே, கோயில்
வளாகத்தின் வெளியே ராஜராஜனுக்கும் சிலை வைத்து, சோழ வேந்தனின்
மாபெரும் கட்டிடக்கலைத் தொண்டுக்கு நன்றி காணிக்கையாக விழா
எடுத்தார்.
அவர் வகுத்தளித்த வழியில் திராவிட மாடல் சிற்பியான மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கம்பீர நடை பயின்று வருகிறார்.
கொரோனா காலத்தில் நலிந்தும் மெலிந்தும் போன சுற்றுலா துறையை தூக்கி
நிறுத்தியுள்ளார், மிகக் குறுகிய காலத்திலேயே செஸ் ஒலிம்பியாட்
போட்டியை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து உலக
ஆட்சியாளர்களின் விழிகளை வியப்பால் விரிய வைத்தார்.
இத்தகைய செயல்பாடுகளால் உலகச் சுற்றுலாப் பயணிகள் ஓடி வந்து
பார்க்கும் அளவுக்கான மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக மாமல்லபுரம்
மாற்றமும் ஏற்றமும் கொண்டு விளங்குகிறது. நீலகிரி, கொடைக்கானல்,
ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி என்றவாறு குளுகுளுவென முகமும் அகமும்
சுகமாய் மிளிர வைக்கும் மலைச் சுற்றுலா தலங்கள்… உலகப் பயணிகளுக்கு
சிவப்புக் கம்பளம் விரித்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம்,
கன்னியாகுமரியில் திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கொடைக்கானலில் வெள்ளி அருவி,
கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, என பொங்கருவித் தங்கு
இடங்கள் இயற்கையாகவே அமைந்து, தமிழ்நாட்டுக்குத் தழைப்பை தந்து
வருகின்றன.
மாமல்லபுரம் குடவரை கோயில்கள், தஞ்சாவூர் பெருவுடையார்
கோயில், அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்,
தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில், நீலகிரி மலை ரயில் என்றவாறு
ஐம்பெரும் பாரம்பரிய உலகச் சிறப்புச் சின்னங்கள் யுனஸ்கோ நிறுவனத்தால்
அங்கீகரித்து அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ள 411 நினைவுச்
சின்னங்களும் தமிழ்நாட்டில் காணக் கிடைக்கின்றன.
உலகிலேயே மிகப்பெரும் இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரையாகும்.
சென்னையில் தொடங்கி குமரிமுனை வரையிலும் 1078 கிலோ மீட்டர்
நீளத்திற்கு நீண்ட நெடும் கடற்கரை அமைந்திருக்கிறது. இந்திய