சென்னை-டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். அமராவதி, சென்னை-டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.பி-5 பெட்டியில் சக்கரங்களுக்கு அருகில் இருந்து புகை வந்தது. உஷாரான லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காவாலி ரெயில் நிலையம் அருகே ரெயில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்ட பிறகு ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பிரேக் ஜாம் காரணமாக புகை வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.