சு. திருநாவுக்கரசர் கோரிக்கை  16 மீனவர்களையும் 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க,

      16 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் 2023 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு படகுகள், நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்களைச் சேர்ந்தவையாகும்.இது, ஒருமாதத்திற்குள் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்றாவது சம்பவம் ஆகும்.அவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் இது போன்ற சம்பவங்கள் அவர்கள் மனதில் அச்ச உணர்வையும் உருவாக்குகின்றது.       தமிழக அரசு இப்பிரச்னைகளை மத்திய அரசிடம் பலமுறை எடுத்துக் கூறியும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தின் 102 மீன்பிடி படகுகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடி படகுகள் இன்னும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை.       எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படுவதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதையும் உறுதிசெய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகள் தொடங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *