‘அடடா.. அட.. அட.. என்னா பேச்சு என்னா பேச்சு’ என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை சட்டசபையில் வைத்து கலாய்த்துவிட்டார் மூத்த அமைச்சரான துரைமுருகன். மேலும், பேசுவதில் விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர் என்றும் பாராட்டு சர்டிஃபிகேட் கொடுத்தார் துரைமுருகன்.காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும் மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது போலவும் பேசுவது ரொம்ப ஓவர் என பதிலடி கொடுத்தார் துரைமுருகன்.EPS”- பொங்கலூர் மணிகண்டன் ‘மாஜி’ அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளராக பணிபுரிந்தவர் கைது.. விசாரணையில் வெளிவந்த பரபர தகவல்கள்! சி.விஜயபாஸ்கர் கேள்வி தமிழக சட்டசபையில் காவிரி குண்டாறு இனைப்புத் திட்டம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஏக்கத்தோடு இந்த திட்டம் குறித்து பேசுவதாக பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘அடடா.. அட.. அட.. என்னா பேச்சு என்னா பேச்சு’ , பேசுவதில் விஜயபாஸ்கர் ரொம்ப கெட்டிக்காரர, நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது வேகமான பேச்சை கேட்பதில் மகிழ்ச்சி என கலாய்த்தார். இதற்கு ஏதோ அதிமுக உறுப்பினர்கள் பக்கம் சலசலப்பு எழுந்ததால் துரைமுருகன் சூடானார். துரைமுருகன் பதில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி மட்டுமே கொண்டு வந்தது போலவும் மற்றவர்கள் எல்லாம் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது போலவும் பேசுவது ரொம்ப ஓவர் என பதிலடி கொடுத்தார் துரைமுருகன். மேலும், அது குறித்து துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு குறித்து ஏதோ சொல்ல, நம்ம ஸ்பீக்கர் எதுவா இருந்தாலும் அவா ஊரையும் கொண்டு வருவார் என நகைச்சுவையாக பேசினார் துரைமுருகன். கால்வாய் வெட்டும் பணிகள் கால்வாய் வெட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் நிச்சயம் முடிக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு நீண்டதொரு பதிலை வரலாற்றுத் தகவல்களோடும், புள்ளி விவரங்களோடும் எடுத்துரைத்துள்ளார்.