தமிழ்ப் பல்கலைக்கழகம், சிற்பத்துறையில் முதுநுண்கலை – சிற்பம் பயின்று வரும்
(MFA) முதலாமாண்டு மாணவர்கள் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
வழங்கிய “பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது” சான்றிதழ், ரூ.10,000/-க்கான
காசோலை மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்.
ம. இளங்கோவன் – பஞ்சலோகச் சிற்பம்மா. இளவரசன் – பஞ்சலோகச் சிற்பம்
ஏ. ஜெயப்பிரகாஷ் – கற்சிற்பமஆகிய மூவர் மேற்கண்ட பரிசுகளை மாமல்லபுரத்தில் நிகழ்ந்த விழாவில் மாண்புமிகு
தா.மோ.அன்பரசன், சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
அவர்களிடம் பெற்று, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர்
பேரா.வி.திருவள்ளுவன் அவர்களிடம் சான்றிதழ், பதக்கம், காசோலை ஆகியவற்றை
காண்பித்து பாராட்டுப் பெற்றனர். உடன் துறைத்தலைவர் முனைவர் வே.லதா
புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.