சிபிஐயின் வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்

நாட்டை ஊழல் அற்றதாக கட்டமைக்க சிபிஐ போன்ற அமைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி பேசினார். புதுடெல்லி, மத்திய விசாரணை அமைப்பான சிபிஐயின் வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- நாட்டின் வளர்ச்சியில் விசாரணை முகமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊழல் மேல் ஊழல் இருந்தது. ஊழல் செய்தவர்கள் எது குறித்தும் அச்சப்படவில்லை. விசாரணை அமைப்புகள் அவர்கள் பக்கம் இருந்தன. விசாரணை அமைப்புகளின் நிலை தற்போது மாறியுள்ளது. – காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது: பிரதமர் மோடி சிபிஐ நடவடிக்கை எடுக்கும் நபர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என எனக்கு தெரியும். அதை கண்டு அஞ்சாமல் சிபிஐ தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். ஊழல்வாதி ஒருவர் கூட தப்பக்கூடாது. சாதாரண மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையும் வழங்குகிறது. சிபிஐ நீதியின் அடையாளமாக மாறியுள்ளதால் முக்கிய விவகாரங்களில் மக்கள் சிபிஐ விசாரணை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது . நாட்டை ஊழல் அற்றதாக மாற்ற சிபிஐ போன்ற திறமை வாய்ந்த அமைப்பு அவசியம். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது” : சிபிஐ பிரதமர் மோடி விசாரணை அமைப்பு முகப்புசெய்திகள்தேசிய செய்திகள் காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது: பிரதமர் மோடி தினத்தந்தி ஏப்ரல்  காசி தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். புதுடெல்லி, காசி தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், காசி- தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச்சங்கம் வெளிக்காட்டியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்தில் வலு சேர்த்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். காசி தமிழ்ச்சங்கத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் அதில் சில கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த யோகதட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *