திருவண்ணாமலை: மே 4, 5 ஆகிய தேதிகளில் சித்ரா பௌர்ணமி வரவுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் திருக்கோயில், பேருந்து நிலையம், மாடவீதி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கோயில், பேருந்து நிலையம், மாடவீதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
