சிங்கப்பெண்கள்..பொன்விழா காணும் தமிழக பெண் காவலர்கள் ..முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதல் அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் காவல்துறையின் பொன் விழாவினை அவரது மகன் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ஏற்று சிறப்பித்தார்.தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. முதல் அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் காவல்துறையின் பொன் விழாவினை அவரது மகன் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ஏற்று சிறப்பித்தார். முதல்வர் முன்னிலையில் பல்வேறு சாகசங்களை மகளிர் காவலர்கள் செய்து காண்பித்து பாராட்டுக்களை பெற்றனர். 1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழக காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடித்தடம் பதிந்தது. அவர் தொடங்கி வைத்த பெண் காவலர்கள் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் காவலர்களுக்கு இணையாக வளர்ந்து சிங்கப்பெண்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்கள். 1973ஆம் ஆண்டு முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.BJP பிரச்னை என்னன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியமில்லை” – ADMK முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி 1976ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் காவல்துறை ஆணையரும் இவர்தான். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவரும் முதல்வர் கருணாநிதிதான். தமிழக போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லியில் சி.பி.ஐ. போலீசில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி பெருமை சேர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *