ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மாதம் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை சீரான அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். முழுமையாக குணம் அடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே நடந்தே வந்தார். அங்கிருந்து காரில் வீட்டுக்கு சென்றார். அவருடன் நாசே ராமச்சந்திரனும் சென்றார். இளங்கோவன் வழக்கமான உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் கூறும்போது என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்போது நலத்தோடு இருக்கிறேன் என்றார்.
சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.
