சமந்தா வலிமையான மனம் கொண்டவர் என பாராட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இதில் முக்கிய வேடத்தில் சமந்தாவும் நடித்திருந்தார். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சி எதுவும் படத்தில் இல்லை. ஆனால், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து கலந்துகொண்டார்கள். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பிறகு அடிக்கடி பார்ட்டிகளில் கலந்துகொண்டனர். நடிகைகள் நட்பாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் பாராட்ட மனம் வராது என்பார்கள். ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
சமந்தாவை பாராட்டி சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவிடும்போது, ‘நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். இந்த பதிவை தனது டிவிட்டரில் பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள், இருவரின் நட்புக்கும் கண் பட்டுவிடக் கூடாது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.