நெல்லை: சபாநாயகராக இருந்தாலும் என் தொகுதி மக்களுக்காக கேட்கிறேன் என கூறி வள்ளியூருக்காக அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தமிழக பட்ஜெட்டும் வேளாண் பட்ஜெட்டும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன.அந்த வகையில் இன்றைய தினம் சட்டத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் கேள்விக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். கூட்டமைப்பில் India சேர்ந்தாலும் சிக்கல்.. சேராவிட்டாலும் சிக்கல் |ட்டசபைக்கு கறுப்பு சேலை: சபாநாயகர் அப்பாவு கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு அந்த வகையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சபாநாயகராக இருந்தாலும் எனக்கும் தொகுதியில் ஒரு கேள்வி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை தாலுக்காக்குரிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் பாளையங்கோட்டையில் நடக்கிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் காலத்தில் வள்ளியூரில் சார்பு நீதிமன்றம் கட்டப்பட்டது. பாளையங்கோட்டை இடவசதி எல்லாம் இருக்கிறது. பாளையங்கோட்டையில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தை வள்ளியூரில் உள்ள சார்பு நீதிமன்ற கட்டடத்தில் இந்த ஆண்டு மாற்றி தர முயலுமா என அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பனார். அதற்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சிரித்துக் கொண்டே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , வள்ளியூரில் இப்போது சார்பு நீதிமன்றம் இயங்கி கொண்டிருக்கிறது. 4 நீதிமன்றங்கள் அந்த ஊரில் 4 நீதிமன்றங்கள் உள்ளன. 1. சார்பு நீதிமன்றம், 2. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 3. கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 4. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. தற்போது நீங்கள் கூடுதலாக கேட்கிறீர்கள். சப் கோர்ட்டை தரம் உயர்த்தி தர வேண்டும் அல்லது பாளையங்கோட்டையில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தை வள்ளியூருக்கு மாற்றித் தாருங்கள் என கேட்டுள்ளீர்கள். மனு தங்களுடைய கோரிக்கை உங்களால் மனுவாக கொடுக்கப்பட்டு அது உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மனு மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ரகுபதி தெரிவித்தார். பொதுவாக மற்ற உறுப்பினர்கள் எப்படி மானிய கோரிக்கை விவாதத்தின் போது தங்கள் தொகுதிக்காக கோரிக்கை வைக்கிறார்களோ அது போல் சபாநாயகர்களும் வைப்பதுண்டு. தொகுதி மக்கள் அன்பு தனது நேர்மையாலும் தொகுதி மக்கள் மீது கொண்ட அன்பினாலும் ராதாபுரம் மக்கள் இவருக்கு வெற்றியை தருகிறார்கள். சபாநாயகர் பணியையும் எந்தவித குறையும் இல்லாமல் செய்து வருவதாக பாராட்டுகள் குவிகின்றன. ஆளும் கட்சியினரே தேவையில்லாமல் எதையாவது பேசினால் அவரை சபாநாயகர் அப்பாவு அமைதி காக்குமாறு கட்டுப்படுத்துகிறார். எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் சொந்த ஊரில் இருக்கும் போது தொகுதி மக்களை சந்திப்பதை அப்பாவு வாடிக்கையாகவே கொண்டுள்ளார். அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வையும் கொண்டு வருகிறார். எதிர்க்கட்சியினர் ஆவேசம் அது போல் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் ஆவேசமடைந்தாலும் கூட இவர் கோபப்படாமல் அமைதிப்படுத்துவார். சில நேரங்களில் காமெடியாகவும் பேசுவார். அந்த வகையில் வேளாண் பட்ஜெட்டின் போது மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்த போது குறுக்கே பேசிய சபாநாயகர் எல்லாருக்கும் வாங்கி கொடுத்துட வேண்டியதுதான் என்றார். உடனே அவையில் சிரிப்பலை எழுந்தது. அது போல் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபைகள், நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்தனர்.
சபாநாயகராக இருந்தாலும் என் தொகுதி மக்களுக்காக கேட்கிறேன்
