சட்டசபையில் துரைமுருகன் பேசும் போது கூறியதாவது

ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன் பேசி உள்ளோம். சென்னை சட்டசபை விதியை தளர்த்தி கவர்னருக்கு எதிராக கொடுவரப்பட்ட தீர்மானத்தின் மீது  :- இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் நம்முடைய முதல்-அமைச்சர்  கொண்டு வந்துள்ளார்கள். அந்த தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரீகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். ஒரு கனத்தை இதயத்தோடுத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்து இருப்பார்கள்.ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தி உள்ளது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே கவர்னர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி திமுக. அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட ஆளுநர் தேவையில்லை என்றுதான் சிலர் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைக்கவும், 365 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்க தங்களுக்கு ஒரு ஏஜெண்டு வேண்டும் என்று ஆளுநர் பதவியை உருவாக்கினார்கள்.பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுநர்கள்தான். முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான்.மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகாறு காரணாமாக சபாஷ் கொட்டி அவரை ராஜ்யசபா தலைவராக்கி உள்ளார்கள். அதை பார்த்துதான் நம்முடைய ஆளுநருக்கு ஒரு நப்பாசை ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன் பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.நமது தலைவர் மு.க ஸ்டாலின் இப்போது ரொம்பவே மாறி விட்டார். நான் கூட நினைத்தேன் என்ன இப்படி ஆகி விட்டார். அவர் பாதி அண்ணாவாகவும், பாதி கருணாநிதியாகவும் மாறி விட்டார் என கூறினார் முதலில் நகைச்சுவையாக பின்னர் கோபமாக, பேசினார். ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் அப்பன் வீட்டுப் பணத்தை வைத்து அவர் இல்லாத படத்தை காட்டுகிறீர்கள்? பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *