கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், கீரை விலை உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள், கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகிறது. வரத்து குறைவு மற்றும் கோடை வெயிலின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக அனைத்து காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கொத்தமல்லி, புதினா விலை உயர்ந்துள்ளன.

இன்று காலை ஒரு கிலோ பீன்ஸ் 30 ரூபாயில் இருந்து 100க்கும் கேரட் 25 லிருந்து 50க்கும் இஞ்சி 40 லிருந்து 120க்கும் கத்தரிக்காய் 20 லிருந்து 45க்கும் வெண்டைக்காய் 15 லிருந்து 30க்கும் சேனைக்கிழங்கு 15 விருந்து 30க்கும் முள்ளங்கி 10 லிருந்து 35 க்கும் அவரைக்காய் 20 லிருந்து 60க்கும் சவ்சவ் 20 லிருந்து 30க்கும் பச்சை மிளகாய் 25 லிருந்து 35 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து கீரைகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ 4 ரூபாயில் இருந்து 10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கிவிட்டதால் முருங்கைக்காய், மாங்காய் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 80 லிருந்து 20 மாங்காய் 100 லிருந்து 15க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ கொத்தமல்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 10 ரூபாய்க்கும் புதினா ஒரு ரூபாயில் இருந்து 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘’வரத்து குறைவு மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தால் அனைத்து காய்கறி, கீரை வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு ஒரு மாதம் நீடிக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *