கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டயா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 242 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 273 ஆக இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 5335 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. கடந்த 7 மாதங்களில் பதிவான கேஸ்களில் இதுதான் மிக மிக அதிகம் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 25,587 தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,30,876 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாசிட்டிவ் சதவிகிதம் 3.32 ஆக மாறி உள்ளது. 2.1 சதவிகிதத்தில் இருந்து 3.32 ஆக இது உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 4,47,39,054 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக பெரிய அளவில் யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த காய்ச்சலுக்கு இடையில் தற்போது மக்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 என்ற அளவில் இருந்து தற்போது 250ஐ தாண்டி உள்ளது. XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் சமீபத்தில் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது. முக்கியமாக சீனாவில் பரவியது. ஆனால் இந்தியாவில் அப்போது பரவவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.இந்த கொரோனா காரணமாக சிலர் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். கொரோனா போகவில்லை என்று பலர் ஆண்டிபயாடிக் எடுக்கிறார்கள். ஆனால் இப்போது எடுத்தால் அந்த ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு உடல் ஏற்றதாக மாறிவிடும். அதனால் இதை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டயா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுக்க மாஸ்க் கட்டாயம் கொண்டு வர வேண்டுமா? ஏதாவது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? மருத்துவமனைகளை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகள் இன்று செய்யப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *