கொரோனா அதிகரிப்பு 8 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை

நாட்டில்  நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லி, தமிழ்நாடு, உபி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தீவிரமாக கண்காணித்து தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *