கொங்கு விவசாயிகளின் கனவு திட்டம் நிறைவேற்றப்படுமா துரைமுருகன் தெரிவித்தித்துளார்.

கொங்கு மக்களின் 65 ஆண்டுகால கனவு திட்டமான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் தொடங்க கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தித்துளார். இந்நிலையில் இப்போதாவது இத்திட்டம் நிறைவேற்றப்படுமா? என்ற ஏக்கத்தில் கொங்கு பகுதி விவசாயிகள் உள்ளனர்.

ஏற்கனவே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதன் துணை திட்டமாக 1958 ஆம் ஆண்டு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்காக தமிழநாடு கேரளா அரசுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள்  பாசன வசதிகளை பெறக்கூடும்.   ஆனால் 65 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை என்பது கொங்கு பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப் பேரவையில் நடந்து வருகிறது. இதில் கேள்வி நேரத்தின் போது பொள்ளாச்சி ஜெயராமன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தொடங்க கேரள அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. கேரள அரசின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் ஆனைமலையாறு நள்ளாறு திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் செயலாளர் மட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவின் மூலம் கேரள அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது  60 ஆண்டுகாலமாக கொங்கு பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக  ஆனைமலையாறு நள்ளாறு திட்டம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்போதைய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இரு மாநில உறவுகளில் சகோதரத்தை கடைபிடிப்பவர் என்பதால், அவர் ஆட்சிக் காலத்திலேயே இத்திட்டத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இத்திட்டத்தை சாத்தியப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *