குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

வத்திராயிருப்பு வட்டம் ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, நடமாடும் நியாய விலை கடையினை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், ஜெய்ந்த் நகர் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, கூட்டுறவுத்துறை மூலம் நடமாடும் நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.03.2023) தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

மேலும் 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.12.40 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.3.625 இலட்சம் மதிப்பிலான பால் கறவை மாட்டு கடனுதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.6.18 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுதவிகளையும் என மொத்தம் ரூ.22.205 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 691 முழு நேர நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 31 முழு நேர கடைகளும், 3 பகுதி நேர கடைகளும் மற்றும் மகளிர் நிறுவனங்கள் மூலம் 4 முழு நேர கடைகளும் என மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 6,12,446 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும், 64 நடமாடும் நியாய விலைக் கடைகளும்; செயல்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு வட்டம் ஜெயந்தி நகரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று குடிமைப் பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக்கடை அமைத்து தரக்கோரியும் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு அனுமதி பெற்று, இன்று கூட்டுறவுத்துறையின் மூலம் 65-வது நகரும் நியாய விலைக்கடை துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *