குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று (அக்டோபர் 20) காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கமானது தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
குஜராத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்
