கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் ஏப்., 28ல் ரிலீஸாக உள்ளது. தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் அவரின் 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்பிறகு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக காயத்திரி பரத்வாஜ் நடிக்கிறார் என தகவல் வெளியானது.ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து காயத்திரி பரத்வாஜ் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் இப்போது கீரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் கீர்த்தி ஷெட்டி
