கார்த்திக் IN சர்தார் திபாவளிக்கு வருகிறார்

தென் இந்திய திரை உலகில் முன்னணி நாயகனாகவும் தனது ஒவ்வொரு படத்தையும் பொழுதுபோக்கோடு சமூக அக்கரை கலந்த கதையாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் தனது நடனத்தால் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கார்த்தி வந்தியத்தேவனாக வசீகரித்தார்.

இந்த வரிசையில் அட்டகாசமான பல கெட்டப்புகளில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.