காசநோய் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த ஆணுகு முறையின் மூலம்
2025ம் ஆண்டிற்குள் காசநோய் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. காசநோயை கணடறிதல், நோயாளிக்கு
தரமான சிகிச்சையை வழங்குதல் மற்றும் காசநோய் ஒழிப்பிற்கு உதவிடும் வகையில் சமூகத்தின் பங்களிப்பை
உருவாக்குதல் ஆகியவை மூலம் 2025ம் ஆணடிற்குள் காசநோய் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி
மாறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ் 2022 ஆம் ஆண்டில்
சுமார் 28,455 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு, சுமார் 2320 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு
85% பேர் வெற்றிகரமாக குணமடைந்துள்ளனர். விரைவாக காசநோயைக் கண்டறிய தூத்துக்குடி மருத்துவக்
கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி தலைமை மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம்
மற்றும் திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில்
நாட் ஆய்வகங்கள் அமைந்துள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் மக்கள் இரண்டு மணி நேரத்திற்குள் தங்களுக்கு
காசநோய் உள்ளதா என்பதனை அறிந்து கொள்ளலாம்.
எச்.ஐ.வி மற்றும் காசநோய் ஆகியவை மோசமான இணைத்தொற்றாக இருப்பதால், நோயின் வீரியம்
மற்றும் இறப்பைக் குறைக்க இரண்டுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பது அவசியமாகிறது. எச்ஐவி மற்றும்
காசநோய் உள்ள 27 நோயாளிகளுக்கு தற்போது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிகிச்சை
வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எச்ஐவி/எய்ட்ஸ் (PLWHA) உள்ளவர்களுக்கு
முழுமையான சேவையை வழங்கும் ART மையம் உள்ளது.
இந்திய அரசாணை (Z-28015/2/2012) இன் படி காசநோய் என்பது அறிவிக்கப்படக்கூடிய நோயாகும்
அனைத்து தனியார் மற்றும் பெருமருத்துவமனைகள், மருந்தகங்கள் தாங்கள் கண்டறிந்த காசநோயாளி
விபரங்களை மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரிவிக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீப காலங்களில், பன் மருந்து எதிர்ப்பு காசநோய் அதிகரித்து வருவது தேசிய காசநோய் ஒழிப்பு
திட்டத்திற்கு சிரமத்தை உருவாக்கியுள்ளது. நோயாளிகள் சரியாக மருந்து உட்கொள்ளாததே இதற்குக் காரணம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 61 வீரிய பன்மருந்து எதிர்ப்பு காசநோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
காசநோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க நமது அரசானது, தமிழ்நாடு-காசநோய் இறப்பில்லா
திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள காசநோயாளிகள்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அதிக முன்னுரிமையுடன் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை
அளிக்கப்படுகிறது. காசநோயாளிகளுக்கு உதவுவதற்கும் அவர்களின் சத்துணவை அதிகரிப்பதற்காகவும்,
ஊட்டச்சத்து ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, இதில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை காலத்தில்
மாதந்தோறும் ரூ.500/- வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில், காசநோயால்
பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்காக, அவர்களின் சிகிச்சைக்
காலத்தில் தற்காலிக இயலாமைக்கான ரூ.1000/- வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை
ஒழிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையின்படி, கடந்த ஆண்டு நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
நமது மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை வழங்கியுள்ளார். இது மாவட்டம் முழுவதும்
சுற்றுப்பயணம் செய்து, எக்ஸ்ரே வசதிகள் இல்லாத பகுதிகளில் காசநோய் கண்டறியும் பணியை செய்கிறது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடனிருப்போரை காசநோய் நோயிலிருந்து தடுப்பதற்காக காசநோய்
தடுப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும், இருமல் மற்றும் தும்மலின் போது வாயை துணியால் மூடிக்கொள்ள
வேண்டும். சாலை மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. அருகில் உள்ளவர்களுக்கு காசநோய்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு
மற்றும் சளியில் இரத்தம் போன்ற காசநோய் அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை

நாட வேண்டும். உங்கள் அனைவரின் ஆதரவுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *