கர்நாடக தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி

பெங்களூர்: கர்நாடக தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. தமிழர்கள் செறிவாக அந்த மாநிலத்தில் இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். “Adaniக்காக மோடி எதையும் செய்வார்” மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி. அப்படி போடுங்க.. எடப்பாடிக்கு பறந்து வந்த போன்.. மறுமுனையில் அண்ணாமலை! 3 பிரதான கட்சிகள் கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவித்த உடனேயே அங்கே கூட்டணி எப்படி இருக்கும்.. முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற கேள்விகள் எழ தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது இவர்கள்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள். இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகள் உள்ளன. சிறிய சிறிய கூட்டணி கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி இந்த முறை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தலில் 3 பெரிய கட்சிகளும் பல சிறிய சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் முக்கியமாக கர்நாடக தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. தமிழர்கள் செறிவாக அந்த மாநிலத்தில் இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. பெங்களூர் நகர்ப்புறம், பெங்களூர் ரூரல், ஷிவமொக்கா, ராமநகரா, மைசூர், கோலார், ஹாசன், மாண்டியா மற்றும் தெற்கு கர்நாடகாவில் சாமராஜநகர், வட கர்நாடகாவில் துங்கபத்ரா அணை மற்றும் ஹோஸ்பெட் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இங்கெல்லாம் அதிமுகவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். அண்ணாமலை பொதுவாகவே கர்நாடகாவில் விசிக, திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு கட்சிகள் அங்கே உள்ளே தமிழர்கள் இடையே பிரபலம். இந்த நிலையில்தான் கர்நாடக தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. ஆனால் கர்நாடக தேர்தல் கமிட்டி துணை தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை இதை விரும்பவில்லை என்றும், பாஜகவின் திட்டத்திற்கு அவர் முட்டுக்கட்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கேயும் எதிர்ப்பு அண்ணாமலை பேசியதாக கூறப்படும் இந்த விஷயங்கள் அதிமுக தலைவர்களையும் வெகுவாக அப்செட்டாக்கி உள்ளது. அந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன், என்று கூறி இருக்கிறார்.  என்ன சொன்னார்? இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக மோதல், கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் பற்றியே அண்ணாமலை பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பில் அண்ணாமலை, சந்திப்பில், கூட்டணி வேண்டாம் என்பது என் முடிவல்ல.தமிழக பாஜக தொண்டர்களின் உணர்வு. தொண்டர்கள் அதைதான் நினைக்கிறார்கள். தொண்டர்கள் எண்ணத்தைதான் நான் வெளியே சொன்னேன். அதைத்தான் கூட்டத்தில் வெளிப்படுத்தினேன்” என்று ஆரம்பித்து அதற்கான பின்னணிகளையும் விவரித்திருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக – அதிமுக கூட்டணிக்கும் இவர் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *