தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்து ஜாமினில் விடுவித்திருக்கிறது. பா.ஜ.க.வினர் தொடுத்த பொய் வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. ஆ. கோபண்ணா, திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி, திரு. ப. செந்தமிழ் அரசு, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரு. எம்.எஸ். திரவியம், திரு. ஜெ. டில்லிபாபு, திரு. அடையாறு த. துரை, மற்றும் திரு. எம்.எஸ். காமராஜ், திரு. சுரேஷ்பாபு, திரு.அகரம் கோபி, திரு. கடல் தமிழ்வாணன், திரு. அன்பழகன், திரு. ரஞ்சித்குமார், திரு. சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திரு. சுரேஷ்குமார், திருமதி. சுகன்யா செல்வம், திருமதி. சுபாஷினி மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்
