கட்டுமான தொழிலாளர்கள் விபத்து நிதி ரூபாய் 2 லட்சமாகவும் திருமணம் நிதி 20, ஆயிரம் ரூபாயக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்குகட்டட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் கோடன கோடி நன்றி
அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் மு.பன்னீர்செல்வம் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை கனிவுடன் ஏற்று
கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்ததால் ஒரு லட்சம் வழங்கப்படுவதை 2 லட்சம் ரூபாயகவும் உயர்த்தியும்.
கட்டுமானத் தொமிலாளர்கள்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தால்பத்தாயிரம் ரூபாய் வழங்குவதை இருபது ஆயிரம் ரூபாயக உயர்த்தி வழங்கி ஏப்ரல் (1-4-2023) ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அரசானை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பாகவும், என்பது லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் கோடன கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்களின் பிற கோரிக்கைகளையும் இந்த பட்ஜெட் கூட்டத்திலேயே நிறைவேற்றி தருமாறு இந்த நல்ல தருணத்தில் முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்