ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்  30.03.2023 அன்று பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற உள்ளது-  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  தகவல்

மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் பொருட்டும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் குறித்த குறைதீர்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்  30.03.2023 அன்று பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது   மாவட்ட மருத்துவம்   ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *