ஓசூரில் தரம் குறைந்த உயர் ரக தக்காளி கிலோ ரூ.2.50 காசுகளுக்கு வெளிமாவட்ட பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் நிலை உள்ளது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிகோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பகுதிகளில் தக்காளி, பீன்ஸ்,கேரட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பால் தக்காளியின் விலை சரித்திருக்கிறது. தரமான தக்காளி கிலோ ரூ.10 க்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கபடுகின்றன. இந்த நிலையில் ஓசூர் அருகே தொட்டமிட்டரை, உத்தனப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் உயர் ரக தக்காளியை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் தரம் இல்லாத அந்த தக்காளி கிலோ ரூ.2.50 காசுகளுக்கு வெளிமாவட்ட தக்காளி பழசாறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கபடுகின்றன.
ஏரியில் கொட்டுவதற்கு பதிலாக ஆலைக்கு தருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உயர்ரக தக்காளி தரமில்லாமல் விளைந்ததால் தினமும் 200 டன் வரை தக்காளி பழசாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்புகின்றனர். தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்காததே இதற்கு காரணம் என தெரிவிக்கும் விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.