ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 7500 காலியிடங்கள் : ஸ்டாப் செலக்ஷன் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசின் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள 7500 குரூப் பி மற்றும் சி பணியிடங்கள், ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு: SSC- Combined Graduate Level Exam-2023. காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணிகள்: Asst.Audit Officer/Asst., Accounts Officer/Junior Statistical Officer/Insepctors/Sub-Inspector/Assistant Section Officer/Auditor/Accountant/Tax Assistant/Postal Assistant/Upper Division Clerk.

சம்பளம்:

  1. Auditor/Accounts Officer/Section Officer: Rs.47,600-1,51,100.
  2. Inspector/Junior Statistical Officer, Accountants: Rs. 44,900-1,42,400.
  3. இதர பணிகளுக்கு ₹29,200-92,300.
    தகுதி: Asst., Audit Officer/Asst., Accounts Officer: ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ/எம்பிஏ (நிதி)/ எம்.காம் ஆகிய பட்டங்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
  4. Junior Statistical Officer: புள்ளியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  5. இதர பணிகளுக்கு: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30க்குள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) ஆல் நடத்தப்படும் 3 கட்ட ஆன்லைன் தேர்வு, கணினி திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 4ம் கட்ட தேர்வின் போது பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். முதல் 3 கட்ட தேர்வுக்கான பாடங்கள், மதிப்பெண் விவரம், தேர்வு விவரங்கள், நேரம் ஆகிய தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.முதற்கட்ட தேர்வு ஜூலையில் சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி, வேலூர்.

Inspector/Sub Inspector (CBEC)
ஆண்கள்: குறைந்த பட்சம்: 157.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும் (எஸ்டி யினருக்கு 152.5 செ.மீ). மார்பளவு 81 செ.மீ. 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 1600 மீட்டர் ஓடும் திறன் மற்றும் 30 நிமிடங்களில் 8 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்த பட்ச உயரம் 152 செ.மீ., உடல் எடை 48 கிலோ. எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு உயரத்தில் 2.5 செ.மீ சலுகை தரப்படும். உடல் எடை 46 கிலோ இருந்தால் போதும். 20 நிமிடங்களில் ஒரு கி.மீ நடக்கும் திறன், 25 நிமிடங்களில் 3 கி.மீ சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Sub Inspector (CBI): பணிக்கான உடற்தகுதி விவரம்:

ஆண்கள்- உயரம்- 165 செ.மீ, மார்பளவு-76 செ.மீ., (விரிவடைந்த நிலையில்). பெண்கள்- உயரம்: 150 செ.மீ. எஸ்டியினருக்கு 5 செ.மீ சலுகை வழங்கப்படும்.

Sub Inspector (NIA): ஆண்கள் உயரம்- 170 செ.மீ., (எஸ்டியினருக்கு 165 செ.மீ) மார்பளவு 76 செ.மீ (விரிவடைந்த நிலையில்).பெண்கள்: உயரம் 150 செ.மீ இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/- இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/முன்னாள் ராணுவததினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.ssconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.5.2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *