ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த சபை எந்த பொருளை வேண்டுமானாலும் விவாதம் செய்யவும், ஆராயவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உரிமை கொண்டுள்ளது.