ஒற்றுமையே வலிமை..” எடப்பாடியை சமாளிக்க சசிகலா, டிடிவி உடன் கை கோர்க்கும் ஓபிஎஸ்? இதை நோட் பண்ணுங்க தேனி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்க ஒரு பக்கம் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் எடப்பாடியை வீழ்த்த சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் ஓபிஎஸ் இணைவார் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் கடந்தாண்டு முதலே மோதல் நிலவி வருகிறது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருப்பதாகச் சொல்லப்பட்ட போதிலும், அது பெரியளவில் வெளியே தெரியவில்லை.சென்னையில் தனி வீடு விற்பனைக்கு நீங்கள் நினைப்பதை விட மலிவாக இருக்கலாம் |ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமை கீழ் கட்சி செயல்பட்டு வந்தது. இருப்பினும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் கடந்தாண்டு வெடித்தது. ”BJP பிரச்னை என்னன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியமில்லை”ADMK நிஜமா புரியல.. திமுக ஏன் அப்படி சொல்லுது? அப்ப “சமாளிக்கவே” இப்படி அறிவிச்சிருக்காங்க: டிடிவி தினகரன் எப்பாடி பழனிசாமி இதனால் எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் அதன் பிறகு தனித்தனியாக இயங்க தொடங்கினர். கடந்தாண்டு நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதவராவார்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராகத் தான் இருக்கும் நிலையில், தனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டப்பட்டதாக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இதில் எடப்பாடிக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்துள்ளது. பொதுச்செயலாளர் இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் நிலையில், அவரை பொதுச்செயலாளராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், எடப்பாடியைத் தவிர வேறு யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் எடப்பாடி போட்டியில்லாமல் தேர்வாகவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இருப்பினும், இதற்கு எதிராகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஓபிஎஸ் தரப்பு அப்செட் ஓபிஎஸ் தரப்பு தேர்தலுக்குத் தடை கோரிய நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம் என்று அறிவித்த சென்னை ஐகோர்ட், இருப்பினும் முடிவுகளை வரும் 24ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது. அதற்கு முன்னதாக 22ஆம் தேதியே பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கையும் விசாரிப்பதாகச் சொல்லியுள்ளது. இப்படி அடுத்தடுத்து வரும் முடிவுகள் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அப்செட்டில் உள்ளனர். இதற்கிடையே எடப்பாடியை வீழ்த்த ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனுடன் கை கோர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருதரப்பிலும் வலுத்துள்ளது. இணைய முடிவு எடப்பாடி பழனிசாமி கட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்தே நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்விகளையே அதிமுக சந்தித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு விமர்சிக்கும் ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் தோல்விக்கு எடப்பாடியின் சர்வாதிகாரமே காரணம் என்று சாடி வருகிறது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் படுதோல்வியடைந்த நிலையில், இந்த விமர்சனம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை வைத்து டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது. மாறும் காட்சிகள் ஒபிஎஸ் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சமூக ரீதியான வாக்கு வங்கியைக் காப்பாற்ற சசிகலா, டிடிவியுடன் இணைந்து செயல்படலாம் என்று அறிவுரை வழங்குகிறார்கள்.. ஓபிஎசும் இதே முடிவில் இருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகச் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, வாய்ப்பு கிடைத்தால் சசிகலா, டிடிவியை சந்திப்பேன் என்றும் அவர்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தேனியில் நடந்த போராட்டம் ஒன்றிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அமமுகவினரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். இது இரு தரப்பும் மெல்ல நெருங்கி வருவதையே காட்டுவதாக உள்ளது. கை கோர்க்கும் ஓபிஎஸ் மிக விரைவிலேயே சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் அணி, அமமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே ஓபிஎஸின் சொந்த ஊரான தேனி பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ஒற்றுமையை வலியுறுத்தி சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் படங்களுடன் பேனர் வைத்துள்ளனர். எதிர்பார்த்த போலவே இதில் எடப்பாடியின் படம் இல்லை.ஒற்றுமையை வலிமை ஓபிஎஸ் ஆதரவாளரும், தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான முத்து என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இந்த பேனர் வைத்துள்ளார். அதில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் படங்கள் பேனர் வைத்துள்ளார். அதில், ‘ஒற்றுமையே வலிமை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, கழக தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றே சசிகலாவும் கூறி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எடப்பாடியை சமாளிக்க சசிகலா, டிடிவி உடன் கை கோர்க்கும் ஓபிஎஸ்
