“ஊறும் வரலாறு” புத்தகத்தின் அறிமுக விழா

சிறுபான்மையினர் நலன் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். கவிஞர் நந்தலாலா பேச்சு.
புதுக்கோட்டை, மார்ச். 26: இன்றைய சூழலில் சிறுபான்மையினர் நலனில் நாம் அனைவரும் கருத்தில் கொண்டு அக்கறை செலுத்த வேண்டிய    அவசியத்தில் இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய  “ஊறும் வரலாறு” புத்தகத்தின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றிய நந்தலாலா பேசியது.
 ஒருவரை அவர் வாழ் நாளுக்குள் பாராட்டிவிடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம்.
     சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தின் இருக்கிறோம்.
      பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத்தோடு துணை நிற்பதை காண்கிறேன். இந்த தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன் எழுதவில்லை என கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழுதத்தான் நந்தலாலா வேண்டும் என்றார்.
விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.  செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கபார்க்கான் வரவேற்க, மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார். சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *