உலக நாடுகளை வியக்க வைத்த சீனா.. ஜி ஜின்பிங் வெளியிட்ட அறிவிப்பு..

ஜனவரி முதல் மார்ச் காலாண்டு வரையிலான காலக்கட்டத்தில் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்ய முக்கியமான காரணம் மக்களின் போராட்டத்திற்கு பின்பு ஜி ஜின்பிங் அரசு சீனாவில் கடுமையான விதிமுறைகள் கொண்ட ஜீரோ கோவிட் பாலிசியை கைவிட்ட பின்பு அந்நாட்டில் உற்பத்தி அதிகரித்தது மட்டும் அல்லாமல் ரீடைல் வர்த்தகம் உயரும் வரையில் உள்நாட்டு நுகர்வு மேம்பட்டு உள்ளது. இதன் வாயிலாக முதல் காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.உலகிலேயே 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் வெறும் 2.9 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 4.5 சதவீதம் வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு முதலும் முக்கிய காரணம் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜீரோ கோவிட் பாலிசியை தளர்த்தவும், கைவிடவும் கொடுத்த அனுமதி மட்டுமே. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு சீனாவில் மால், ஷாப்பிங் ஏரியா, உணவகங்களில் மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது.

மார்ச் மாதம் சீனாவில் ரீடைல் கன்ஸ்யூமர் கூட்ஸ் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 10.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சராசரியாக 7.1 சதவீத வளர்ச்சி மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் சந்தை விரிவாக்கம் அடைந்துள்ள காரணத்தால் உற்பத்தி துறையும் மேம்பட்டு சீனாவின் பொருளாதாரம் 4.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சீன அரசு இந்த ஆண்டு 5 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைவதை இலக்காக கொண்டு இருந்த நிலையில், முதல் காலாண்டிலேயே 4.5 சதவீதம் வளர்ச்சி அடைந்து உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. சீன பொருளாதாரம் கடந்த ஆண்டு 3 சதவீதமாக சரிவடைந்தது. இது மட்டும் அல்லாமல் திங்கட்கிழமை சீனாவின் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை, இதன் மூலம் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது.
உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் ரெசிஷன், நிதி நெருக்கடி, பணவீக்கம் என போராடி வருகிறது, அதிலும் குறிப்பாக ஐரோப்பிய பிராந்தியத்தில் பிரிட்டன் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் திவாலாக 75 சதவீதம் வரையில் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறும் நிலையில் பிற ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகப்படியான பணவீக்கத்துடன் பொருளாதார வளர்ச்சியில் மந்தமான சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா உடன் வர்த்தக போர், தைவான் நாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆயுத போர், வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் உடன் புதிதாக நெருக்கம், ரஷ்யாவுக்கு உதவி என பல முனைகளில் பிரச்சனைகளையும், முன்னேற்றத்தையும் எதிர்கொண்டு வரும் சீனா, யாரும் எதிர்பார்க்காத வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *