உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை நிதியுதவி ரூபாய். 15 இலட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னையைச் சார்ந்த .முத்தமிழ்ச் செல்வி  2023-ஆம்
ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் "-மூலம் நேபாளம்
தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள
குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில்
8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு  அன்று
சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் செல்கிறார். நேபாள அரசின்
ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின்
பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு
அரசு மற்றும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர்  கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து  இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர்.உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்‌
நிதியுதவியாக ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை 28.03.2023 அன்று
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால்
மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம்
மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம்
கூடுதலாக ரூபாய் 15 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வீராங்கனைக்கு முத்தமிழ்ச் செல்வி கூறும்போது :-
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு
செய்யப்பட்டுள்ள முதல் பெண் நான். எனது கனவை நனவாக்கும் வகையில்
நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின்
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகரம் ஏறுவதற்கு நிதியுதவி வேண்டி இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  கோரிக்கை
விடுத்திருந்தேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்‌
நிதியுதவியாக ரூபாய் 10-இலட்சம் வழங்கினார்.
இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு நண்பர்கள்,உறவினர்கள் நிதியுதவி
வழங்கினார்கள் ஆனாலும் கூடுதலாக ரூபாய் 15 இலட்சம் தேவைப்பட்டது.
இது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த
நிலையில் தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூபாய் .15 இலட்சம் வழங்கிட
ஏற்பாடு செய்தார்கள். அதற்காக  அமைச்சர் அவர்களுக்கு நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழ்ச் செல்வி பற்றி
பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கியவர். 2021-ஆம்
ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவினையொட்டி விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மலைப்பட்டு மலையில் 155அடி
உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58நிமிடங்களில் இறங்கினார்.
பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகுறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்திட 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமாச்சல்
பிரதேசம்,குலுமணாலி மலையில் தனது இரு‌பிள்ளைகளுடன் ஒரு சிறுமியை
முதுகில் கட்டிக்கொண்டும்,மற்றொரு சிறுமியுடன் 165அடிஉயரத்தில் இருந்து
கண்ணை கட்டிக்கொண்டு 55நிமிடங்களில் கீழே இறங்கி நடந்து வந்தார்.
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில்
3 மணிநேரம் அமர்ந்து‌ 1389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார்.
மேலும், இமாச்சல பிரதேசம் ,லடாக் பகுதி,காங் யெட்சே பீக் -2(KANG YATSE
HILL) மலையில் 5500மீட்டர் வரை ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *