நகல் ரேஷன் கார்டை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்றாலும், ஆனால் பணம் செலுத்தவும், கார்டை பெறவும் நேரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தொலைந்து போன அல்லது பெயர் அல்லது ஊர் திருத்தங்கள் மேற்கொண்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை இனி தபால் மூலம் பெற முடியும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள திட்டம் பற்றி பார்ப்போம். கடந்த 2020ம் ஆண்டு முதலே காணாமல் போன, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பித்து பெற முடியும்.
ஆனால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையை செலுத்தவும், புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.விண்ணப்பதாரர்கள், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லாமல் இணைய வழியிலேயே புதிய ரேஷன் கார்டுக்கான பணத்தை செலுத்திடும் வகையிலும், தபால் மூலமாக புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது..இதன்படி, உங்கள் ரேஷன் அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை கேட்டு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினால் புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.இந்த புதிய வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய வசதியை தொடங்கிவைத்தார். குடும்ப அட்டை சரி, எப்படி நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம். https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியை உங்கள் மொபைல் அல்லது கணிணியில் சொடுக்குங்கள். உள்ளே சென்றால், வலது புறத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணபிக்க என்று இருக்கும்.அதை கிளிக் செய்யுங்கள்.அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை கொடுங்கள். அதில் கேப்ட்சா குறியீடு இருக்கும் அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.உள்ளே சென்று விண்ணபித்து குடும்ப அட்டை நகலை பெறலாம். அதற்கு கட்டணம் செலுத்த கேட்கும். அதற்கான தொகையை ஆன்லைனிலேயே யுபிஐ அல்லது வங்கி கணக்கு மூலம் செலுத்தினால், உங்கள் வீட்டிற்கே நகல் குடும்ப அட்டை வந்துவிடும்.முன்னதாக சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் நற்சான்றிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு தலைமை தபால் இயக்குனர் ஶ்ரீதேவி, தலைமை தபால் இயக்குனர் ஜி.நடராஜன், தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் எஸ். பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்இந்தியா தமிழ் வா
R