உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபையில் பதிலளித்தார். அ

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கடனுதவி தொடர்பான சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபையில் பதிலளித்தார். அப்போது குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்றும் சின்னவர் துறையில் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் ஐஸ் வைக்கும் வகையில் பேசினார். ஆனால் தன்னை பற்றிய புகழாரங்களை கண்டு கொள்ளாத அமைச்சர் உதயநிதி கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்தார். மோடி, அமித்ஷா அண்ணாமலையை நம்பவில்லை – ப்ரியன், பத்திரிகையாளர் 7000 கோடியில் எப்படி 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 தரப்படும்? ஸ்டாலின் மாஸ்டர்பிளான்.. இதான் பின்னணியா! சட்டசபை கூட்டம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 6வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, அமைச்சர் உதயநிதி அளித்த பதிலை பாராட்டி அவரை நல்ல அமைச்சர் எனக் குறிப்பிட்டு பேசி அமர்ந்தார். ஐஸ் வைத்த எம்.எல்.ஏ. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது ஆழமான பதிலுக்கு ஆழமான நன்றியை தெரிவித்துக்கொண்ட ஜிகே மணிக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக கூறினார். அதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பேசும் போது, உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்றும் சின்னவர் துறையில் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் ஐஸ் வைக்கும் வகையில் பேசினார். உதயநிதி ஸ்டாலின் தன்னை சின்னவர் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட போது முகத்தில் எந்த ரியாக்‌ஷனையும் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தார் உதயநிதி. தன்னை பற்றிய புகழாரங்களை கண்டு கொள்ளாமல் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பேச எழுந்த போதெல்லாம் அவரை வைத்த கண் வாங்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்தார். உதயநிதி எப்படி பேசுகிறார், பேப்பரை பார்த்து பேசுகிறாரா, அல்லது ஏற்கனவே எல்லா விவரங்களையும் அறிந்து வந்து பேசுகிறாரா என்பதை நோட் செய்தார் முதல்வர். 00:00 / 02:30 சரளமாக பேச்சு உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில்களால் சிக்ஸர் விளாசிவிட்டார் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு தயக்கமின்றி, தடுமாற்றமின்றி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *