தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் வரும் நாட்கள் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிறிய அளவிலான மாற்றங்கள் வரும் நாட்களில் செய்யப்பட உள்ளதாகவும், இலாக்கா அளவில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வருட இறுதியில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுன.உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்ட.உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் வரும் நாட்கள் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிறிய அளவிலான மாற்றங்கள் வரும் நாட்களில் செய்யப்பட உள்ளதாகவும், இலாக்கா அளவில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்த அமைச்சரவை இலாக்கா மாற்றம் முழுக்க முழுக்க ரிப்போர்ட் அடிப்படையில் செய்யப்பட உள்ளது. அதாவது அமைச்சரவை இலாக்காவை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இதை அவ்வப்போது அமைச்சர்கள் கொடுப்பார்கள். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க். இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை இலாக்கா மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.அதாவது இந்த முறை அமைச்சர்களின் அமைச்சர் பதவியில் மாற்றம் இருக்காது . யாருடைய அமைச்சர் பதவியும் நீக்கப்படாது. மாறாக துறை ரீதியாக சில மாற்றங்கள் இருக்கும். முன்னதாக அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்களின் போது கட்சியில் சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படி கட்சியின் முக்கியமான அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது அதேபோல் இந்த முறையும் அமைச்சரவையில் முக்கியமான சில துறை ரீதியான மாற்றங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த முறை அமைச்சரவை மாற்றத்தின் போது, டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை.ஆனால் இந்த முறை டாப் இலக்காக்களில் கூட சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம். சில அமைச்சர்களின் தலைகள் உருளலாம் என்று தமிழ்நாடு கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது
