உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்கள் கிடைக்கும் வழிகளில் விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.