ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி கே.எஸ். அழகிரி

 

சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும்
உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி, நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை
ஈஸ்டர் திருநாள். ஈஸ்டர் திருநாளில் விரதமிருக்கும் கிறிஸ்துவ சமுதாயத்து
மக்கள் இந்நாளில் செலவழிக்காமல் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை
எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும்
மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.

கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய
பங்காற்றி வருகிறது. முதியோர் இ;ல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச
கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது
ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன.
இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ
சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள்
அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *