இலவச பேருந்து, மாதம் ரூ1,000 உதவி தொகை.. சரித்திரம் படைக்கும் திராவிட மாடல்!

சென்னை: பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தி மிகப் பெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய திராவிட மாடல் அரசு இப்போது மாதந்தோறும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது பெரும் வரவேற்புக்குரியதாகும். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுதான். இத்தகைய இலவச பயணத்தின் மூலம் பெண்களுக்கு அதுவரையிலான செலவுகளில் ரூ1,000 சேமிப்பாக கிடைத்தது. இது உழைக்கும் பெண்களுக்கு மிகப் பெரிய வரபிரசாதமாக கொண்டாடப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாகும். by TaboolaSponsored Links Citizens of India aged 40-80 can take advantage of this opportunity. Homeownerhome 2/3 BHK Apartments Bang on OMR, ₹42.39 Lacs Onwards with No PRE-EMI Offer Urbanrise Revolution One Get Quote பெண்களுக்கான உரிமையை பேசுகிற இயக்கமாக திராவிடர் இயக்கம் இல்லாமல் நடைமுறைப்படுத்துகிற அரசாகவும் இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக திகழ்ந்தது இந்த இலவச பயண திட்டம். Recommended Video Neet Exam-ல் இருந்து Tamilnadu-க்கு விலக்கு கொடுக்க வாய்ப்பு குறைவு | Sumanth C Raman Interview கண்டிஷன் எதற்கு.. அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 தர வேண்டும்..எடப்பாடி பழனிச்சாமி இந்த சரித்திர சாதனையில் மற்றொரு மணிமகுடமாக பெண்களுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்புதான். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக வெளியிட்ட்ட அறிவிப்பு: சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை – சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது திராவிட மாடல் அரசு.கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்ற இலக்கின்படி செயல்பட்டு வருபவர்கள் மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவீர்கள்.மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் உறுதியாக நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில்,திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *